search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொமினுல் ஹக்யூ"

    ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. #BANvZIM
    வங்காள தேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. லிட்டோன் தாஸ், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    லிட்டோஸ் தாஸ் 9 ரன்னிலும், இம்ருல் கெய்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும், 4-வது வீரராக களம் இறங்கிய முகமது மிதுன் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காள தேசம் 26 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

    4-வது விக்கெட்டுக்கு மொமினுல் ஹக்யூ உடன் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வங்காள தேசத்தை சரிவில் இருந்து மீண்டது. இருவரும் சதம் அடித்தனர். முதல் நாள் ஆட்டம் முடிவதற்கு சற்று முன் மொமினுல் ஹக்யூ 161 ரன்கள் குவித்து ஆட்டமிழந்னர். முஷ்பிகுர் ரஹிம் -  மொமினுல் ஹக்யூ ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 266 ரன்கள் குவித்தது.

    அடுத்து தைஜுல் இஸ்லாம் களம் இறங்கினார். இவர் 4 ரன்னில் வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் மெஹ்முதுல்லா ஜோடி சேர்ந்தார்.

    வங்காள தேசம் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் சேர்த்தது. முஷ்பிகுர் ரஹிம் 111 ரன்னுடனும், மெஹ்முதுல்லா ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.



    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மெஹ்முதுல்லா 36 ரன்னிலும், அடுத்து வந்த அரிபுல் ஹக்யூ 4 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    8-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் மெஹிது ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தார். முஷ்பிகுர் ரஹிம் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். வங்காள தேசம் 160 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    முஷ்பிகுர் ரஹிம் 219 ரன்களுடனும், மெஹிது  ஹசன் மிராஸ் 68 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்வே அணி சார்பில் ஜார்விஸ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    ஆசிய கோப்பைக்கான வங்காள தேச அணியில் இடம் பிடித்துள்ள முக்கிய வீரர்கள் காயம் அடைந்துள்ளதால், அந்த அணிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. #AsiaCup2018
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 15-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். ஷாகிப் அல் ஹசன் ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வந்தார். அவர் எப்படியும் குணமடைந்து விடுவார் என்று வங்காள தேச கிரிக்கெட் அணி நம்பிக்கையில் இருந்தது.



    ஆனால் தான் 20 முதல் 30 சதவிகிதம் உடற்தகுதி மட்டுமே பெற்றுள்ளேன் என்று ஷாகிப் அல் ஹசன் தெரிவித்தார். இதனால் வங்காள தேச அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்ட தொடக்க வீரர் தமிம் இக்பாலின் வலது கை விரலில் முறிவு ஏற்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தமிம் இக்பால் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. ஒரே நேரத்தில் முக்கியமான இரண்டு வீரர்கள் காயத்திற்குள்ளானதால் வங்காள தேச அணிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ×